அர்ஜெண்டினாவின் வடக்கே ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரியன்டெஸில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவத் துவங்கியது. இதனால் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து போயுள்ளன.இது அப் பகுதியிலுள்ள மொத்த நிலப்பரப்பின் 6 சதவீதம் ஆகும்.வறண்ட காலநிலை காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.