இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20- 20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
165 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலைப்படுத்தியது.
வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான சுப்பர் ஓவரில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 பந்துகளில் 6 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.