எரிபொருள் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோலிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.