இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இசான் கிசான் 89 ஓட்டங்களையும்,ஸ்ரோயாஷ் ஐயர் 57 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் தசுன் சாணக்க 1(19) விக்கெட்டை கைப்பற்றினார்.
200 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது
இலங்கை அணி சார்பில் அதிகப்படியாக சரித் அசலன்க 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 2(9) விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கமைய இந்தியா அணி 2-1 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.