கைத்தொழில் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.
அந்த வகையில், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இந்த நேற்றைதினம், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அதன்படி, தொழில் துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இரு அதிகாரிகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.
உற்பத்தி போன்ற இலங்கைக்கான முன்னுரிமைப் பகுதிகளுக்கு இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச முக்கிய விமர்சகராக இருந்த போதிலும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.