இலங்கைக்கு எதிரான முதலாவது டி 20 ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 20 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் பென் மெக்டெர் மொட் 53 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.150 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி துடுப்பாடும் போது மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி போட்டி 19 ஓவர்கள் ஆக மட்டுப்படுத்தபட்டதுடன் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 143 ஆக குறைக்கப்பட்டது. எனினும் 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இலங்கை அணியின் சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அவுஸ்ரேலியாவின் பந்து வீச்சில் ஹேசில்வூட் 4(12) விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அவுஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...