இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும் , விக்கெட் காப்பாளருமான குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அணித் தலைவர் தசுன் சாணக்க தெரிவித்துள்ளார்.
எனவே, விக்கெட் காப்பாளராக தினேஷ் சந்திமால் முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.