இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது.
சிட்னியில் இன்று இரவு முதலாவது ஆட்டம் இடம்பெறவுள்ளது.இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் இலங்கை அணியின் புதிய நட்சத்திரங்களான பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை 5 போட்டிகளில் பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.