ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை!

Date:

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளையடுத்து முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த போதிலும் ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நாமல் பலாலே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணை மன்றத்தினால் முன்னாள் பொலிஸ் மா அதிபரை விடுவிப்பதற்கான தீர்ப்பை அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...