உக்ரைன் ஜனாதிபதி வேளோடிமிர் ஜெலென்ஸ்கி தனது மக்களுக்காக போராட முன் வந்துள்ளாா். ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆயுதம் ஏந்தி படைகளுடன் இணைந்துகொண்டுள்ளாா். உக்ரைன் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அந் நாட்டு மக்களுக்கும், பாதுகாப்பு படைப்பிரிவினருக்கும் தைரியமளிப்பதாக அமைந்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலால் அனைத்து உலக நாடுகளும் பதற்றம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி களத்தில் இறங்கியுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.