உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் மொஸ்கோ பங்குச் சந்தையின் பங்கு விலை குறியீடு 14% மாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து பங்குச் சந்தையில் வணிகம் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக ரஷ்யா வங்கி தலையிட்டதால் மீண்டும் பங்குச் சந்தையில் வணிகம் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.