ரஷ்யா படையினர் பல முனைகளிலும் உக்ரைனுக்குள் முன்னேறிச் செல்லும் நிலையில் உக்ரைன் படையினரின் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுகுயிவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வீடுகள், வாகனங்கள் சேதமடைந்ததுடன் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் குண்டு வீச்சு ஏவுகணைத் தாக்குதல் ஆகியவற்றால் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ,9 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.