ரஷ்யா மீது பயணம் மற்றும் வர்த்தக தடையை நியூசிலாந்து விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பத்திரிகையாளர்களிடம் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான தளபாடங்கள் வர்த்தகத்திற்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அங்கு ஏற்படவுள்ள பேரழிவுக்கு தடை போட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பிலான வெளியுறவுத்துறை ஆலோசனைகள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் சில தடைகளை ரஷ்யா மீது தடை விதிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.