உக்ரைன்-ரஷ்யா போர் Updates; கப்பல் போக்குவரத்து நிறுத்தம்: தரைப்படையெடுப்பு ஆரம்பம்!

Date:

அசோவ் கடலில் உக்ரைனுக்கான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா பெலராஸ் எல்லைகளிலிருந்து ரஷ்யா தரைப்படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா எல்லையை ஒட்டிய கார்கிவ் மாநிலத்திலுள்ள சுகுயேவ் விமானப்படைத் தளத்தின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அப் பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது.

வடக்கே பெலாரசில் இருந்தும் ,வடக்கிலும் கிழக்கிலும் ரஷ்யாவில் இருந்தும் என பல முனைகளிலும் ரஷ்யத் தரைப் படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதை அந் நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மோதலில் உக்ரைன் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு தெற்கே உள்ள அசோவ் கடல் வழியாக அந் நாட்டின் மரியுபோல் துறைமுகத்துக்குக் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்தி விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...