‘எங்களுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவ முன்வரவில்லை’: உக்ரைன் ஜனாதிபதி

Date:

ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் எங்களுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவ முன்வரவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதி புடின், தங்களது படைகளுக்கு போர்தொடுக்க உத்தரவிட்ட நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்று கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது சராமரியாக குண்டுமழை பொழிந்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி சர்வதேச ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் நாட்டுக்கு யாரும் உதவ முன்வரவில்லை அனைவரும் அச்சம் கொள்கின்றார்கள், மேலும், ‘நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக்க யார் தயாராக இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர், உக்ரைனுக்கு துணையாக இருப்போம் எனக் கூறியவர்கள் அனைவரும் இப்போது அஞ்சுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ரஷ்யாவின் தாக்குதலில் இராணுவத்தினர், பொதுமக்கள் உட்பட 137-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

ரஷ்ய படைகள் முதலில் என்னையும் என் குடும்பத்தையும் குறிவைத்துள்ளன. நாங்கள் தலைநகர் கீவில்தான் இருக்கிறோம்’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.

அத்தோடு இதுவரை நேட்டோ அமைப்பு உள்ளிட்ட 27 நாடுகளிடம் கேட்டுக்கொண்டேன்.

ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை. நேரடியாக பல நாட்டின் தலைவர்களையே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். யாரிடமும் பதில் இல்லை.

அவர்கள் ரஷ்யாவுக்கு அஞ்சுகிறார்கள். ஆனால் உக்ரைன் எதற்கும் அஞ்சவில்லை, ரஷ்யாவிற்கு அஞ்சவில்லை.

எங்களுடன் போரிட யார் தயாராக இருக்கிறார்கள்? யாரும் இல்லை. நேட்டோவில் உக்ரைன் இணையத் தயாராக இருந்தது. இப்போது நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக்க யார் தயாராக இருக்கிறார்கள்?

நேட்டோ அமைப்பில் இந்த நிமிடம் வரை உக்ரைன் உறுப்பினர் இல்லை. அந்த அமைப்பினர் இதுவரை உதவவில்லை.

அவர்கள், உக்ரைன் மக்களுக்கு என்ன உத்தரவாதம் தர முடியும்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். நேட்டோவில் இணைப்பதாக கூறிய நாடுகள் அனைத்தும் இன்று அச்சத்தில் இருக்கின்றன.

மேலும், ‘ரஷ்யா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். 316 பேர் காயமடைந்துள்ளனர்’ என்றார்.

தற்போது உக்ரைனில் போர் நடைபெற்று வரும் சூழலில், உக்ரைனில் இருந்து 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

மேலும், ரஷ்யாவின் போர் எதிரொலியாக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...