எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாட்டில் மின் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேவைக்கு ஏற்ப போதுமான மின் உற்பத்தி உள்ளதால், இது போன்ற மின்வெட்டுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.