எரிபொருள் நெருக்கடி: விலை திருத்தத்தை கோருகிறது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Date:

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அரசாங்கம் இதுவரையில் அந்த கோரிக்கைக்கும் பதிலளிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ‘மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலையை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு பொறிமுறையை அமைச்சகத்திற்கு நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

மற்ற நாடுகளில், எரிபொருள் விலை நிர்ணயம் வாரந்தோறும் அல்லது தினசரி மதிப்பாய்வு செய்யப்படுகிறது,’ சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், கச்சா இறக்குமதிக்கான ஆறு மாத கால ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலையானது, தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையின் வாங்கும் சக்தியை சிக்கலாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

லங்கா ஐஓசி கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோலின் (ஒக்டேன் 95) எரிபொருள் விலையை 3 ரூபாவாலும், பெற்றோல் (ஒக்டேன் 92) லிட்டருக்கு 7 ரூபாவாலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமைச்சர் விஜித ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் நாளை...

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...