எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பு!

Date:

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டிய புதிய விலைகளைக் குறிப்பிட்டு மீண்டும் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

லங்கா ஐஓசி அண்மையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அண்மையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...