கொழும்பின் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

Date:

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு இன்று (09) 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று மாலை 04.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் தடைப்படும் பிரதேசங்களாக,ஏகல, கொட்டுகொட, உதம்மிட்ட, ரஜ மாவத்தை, நீர்கொழும்பு வீதி, வஹட்டியாகம, தலத்துர, கட்டுநாயக்க, சீதுவ, கட்டுநாயக்க விமானப்படை தளம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் கடான தெற்கு ஆகிய பகுதிகளுக்கு   நீர் விநியோகம் தடைப்படும்.

மேலும் உடுகம்பொல மற்றும் மினுவாங்கொடையின் சில பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...