தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

Date:

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதுடன் நாளொன்றுக்கு சுமார் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்தும், தமிழக படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட 11 மீனவர்களை, படகுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக தெரிவித்து  இந்த மீனவர்களை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தமிழக முதல்வர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதன்போது, தமிக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் எண்ணற்ற நிகழ்வுகளைத் தடுத்திட இந்திய அரசின் உயர்நிலை அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தமிழக முதல்வர் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...