பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன், தனிப்பட்ட விமானமொன்றில் கடந்தவருடம் இந்தியா திருப்பதிக்குச் சென்றிருந்தார்.
இந்த தனிப்பட்ட விஜயம் தொடர்பில், மேற்படி ஆணைக்குழுவுக்கு கடந்த 2021.12.31 ஆம் திகதியன்று செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு சட்டத்தை மீறி தனியார் ஜெட் விமானத்தை பரிசாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் இலஞ்சம் பெற்றாரா என்பதை உறுதி செய்யும் வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
2021 டிசம்பர் 31 ஆம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஜெட் விமானம் மூலமான பயணம் குறித்த செய்திகள் பரவியதையடுத்து, பிரதமரின் நெருங்கிய சகா ஒருவரால் இது பரிசளிக்கப்பட்டது என பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.