பிரபல வானொலி அறிவிப்பாளரும்,ஊடகவியலாளருமான சனூஸ் முகம்மத் பெரோஸ் காலமானார்.
மேல் மாகாணம் பேருவளை மருதானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வானொலி தமிழ்ச் சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கட்டுப்பாட்டாளர் பதவி வரை வகித்தவர் ஆவார். இறுதிக் காலத்தில் முஸ்லிம் சேவையின் பொறுப்பாளராகவும் கடமையாற்றியதோடு,இலங்கை ரூபவாஹினியில் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். சிறந்த செய்தி அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதை ஒரு முறை வென்றார். பல்வேறு நாடகங்களிலும் பங்கு கொண்டு கலைத் துறையிலும் பிரகாசித்தவராகும்.
அண்மைக் காலமாக சுகவீனமுற்று நீண்ட நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.