பிரிட்டன் இளவரசா் சாா்ல்ஸுக்கு மீண்டும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசா் சாா்லஸுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால் அவா் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
73 வயதான சாா்லஸ், இளவரசி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக பிரிட்டன் அரசராகப் பொறுப்பேற்கும் நிலையில் உள்ளாா். ஏற்கனவே அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.