ஒரு நாடு முன்னேற பெண்களும் குழந்தைகளும் மதிக்கப்படும் சமூகமொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, ‘கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மற்ற நாடுகளில் உள்ள இளைஞர்கள் அமைச்சர்களின் பின்னால் சென்று அரசியல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு வேலை வாங்குவதைப் பார்க்கிறீர்களா? இல்லை.
ஏனென்றால் அந்த நாடுகள் கல்வியின் தரம் மிக உயர்ந்ததாக இருப்பதையும், அனைத்து மக்களும் தங்களுக்கான வாழ்க்கையை சம்பாதிக்க அல்லது ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வதற்கு போதுமான கல்வியறிவு பெற்றிருப்பதை உறுதிசெய்கிறது.
எனவே, ஒரு நாட்டில் கல்வி முறை வீழ்ச்சியடைவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது என அமைச்சர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ‘பெண்கள் நடத்தும் பல்பொருள் அங்காடி’ ஒன்றை அமைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அந்த பல்பொருள் அங்காடியில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அத்தோடு ‘ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர் பிரிவுக்கும் ஒரு பெண்மணியால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடியைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது, மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் 2000 ரூபாய் கொடுப்பனவுடன் இலத்திரணியல் அட்டை வழங்கப்படும், அங்கு அவர்கள் குறிப்பிட்ட பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க முடியும். , ‘என்று அவர் கூறினார்.
எனவே ஒரு சமூகமாக முன்னேற பெண்கள் மற்றும் குழந்தைகளை நாம் மதிக்க வேண்டும், ‘என்றும் டலஸ் அழகப்பெரும் குறிப்பிட்டுள்ளார்.