புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இப் பின்னணியில், இப் பிரச்னையில் பொது உரையாடலை உருவாக்கும் நோக்கில், மாவட்ட அளவில் தொடர் கருத்தரங்குகளை நடத்த, “மக்கள் அரசியலமைப்புக்கான சமூக இயக்கம்” செயல்பட்டு வருகிறது.முதலாவது மாநாடு 2022 பெப்ரவரி 19 ஆம் திகதி கண்டியில் உள்ள வெவரவும சம்பத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இணைய வழி மூலம் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது, எவருக்கும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கால முக்கியத்துவம் வாய்ந்த இக்கருத்தரங்கில் புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதை உணர்த்த விரும்புகிறோம்.