ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய Batsirai புயலால் உருவான பலத்த மழை காரணமாக பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
புயல் காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையில், சேற்றில் சிக்கிய வாகனங்களை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் அப்புறப்படுத்தினர். மணிக்கு சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.