விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரி சட்டமூலம் 2/3 பெரும்பான்மையுடன் மற்றும் பொதுவாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என இலங்கை உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வினை தொடங்கி வைத்து உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அதனை நிறைவேற்ற வேண்டுமாயின், பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆகவே விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் எனில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.