இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹெம்மாதகம, கொடேகொடை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி பரிபாலன சபையின் ஏற்பாட்டில், பிரதேசத்தின் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளை, கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று கொடேகொடை அல் ஹுதா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், விசேட அதிதியாக பேராதனை பல்கலைக்கழக விவசாய பொறியியல் பீட பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம்.மவ்ஜூத் கலந்து சிறப்பித்தார். பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் கௌரவிக்கப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு:
அல்-ஹாஜ் ஏ.சீ.எம்.அஸ்ஹர் (ஓய்வு பெற்ற அதிபர்), அல்-ஹாஜ் எம்.ஐ.எம். ஜுனைத்
(ஓய்வு பெற்ற அதிபர்), எம்.எஸ்.எம்.ரபீக்
(ஓய்வு பெற்ற அதிபர்), அல்-ஹாஜ் எம்.எச்.ஏ. ஸத்தார்
(மௌலவி ஓய்வு பெற்ற ஆசிரியர்), அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ரஜப்தீன்
(ஓய்வு பெற்ற ஆசிரியர்), அல்-ஹாஜ் ஏ.ஏ.ஏ.ஜவாத்
(மௌலவி ஓய்வு பெற்ற ஆசிரியர்), எம்.ஏ.ஸைபுன்னிஸா (ஓய்வு பெற்ற ஆசிரியை), ஏ.எஸ்.எஸ்.இமாயா (ஓய்வு பெற்ற ஆசிரியை), எம்.ஜே.எப்.வஜீஹா (ஓய்வு பெற்ற ஆசிரியை), எஸ்.ஏ.எஸ்.மிஸ்ரியா (ஓய்வு பெற்ற ஆசிரியை), எஸ்.எல்.எஸ். சுலைஹா (ஓய்வு பெற்ற ஆசிரியை), எம்.எச். உமமுஹானி (ஓய்வு பெற்ற ஆசிரியை), எம்.எஸ்.எம்.பாரூக் (ஓய்வு பெற்ற பஸ் நடத்துநர்)