20 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை!

Date:

ஈஸ்டர் ஞாயிறு வழக்கில் கைதான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

20 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் கடந்த காலங்களில் மறுத்திருந்தது.

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்த போதிலும், அது தனது அதிகார எல்லைக்கு உட்பட்டது அல்ல என்பதனால் பிணை உத்தரவு நிராகரிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் பிணை கோருமாறும் நீதிவான் தரப்பினருக்கு தெரிவித்துள்ளார்.

ஹிஜாஸின் சட்டத்தரணி அவருடைய நலன் கருதி ஏனைய தரப்பினருடன் சமரசம் செய்து கொள்ள இணங்கியதையடுத்து, புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜனவரி 20 ஆம் திகதி, சட்டமா அதிபர் (ஏஜி) திணைக்களம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியிருந்தது.

இந்த வழக்கு  கடந்த (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதிகள் புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தால் மட்டுமே பிணை வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஏப்ரல் 2020 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு 20 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது PTA மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...