ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூரில் இன்று ஆரம்பமானது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் அதிரடி வீரரான இந்தியாவின் சுரேஷ் ரய்னா ஏலம் போகவில்லை.ஐ.பி.எல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த ரய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் மற்றும் அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் சகீப் அல் ஹசன் ஆகியோரை ஏலம் எடுப்பதில் எந்த அணியும் விருப்பம் காட்டவில்லை.ரொபின் உத்தப்பா, ஜெசன் ராய், ஆகியோர் அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ரொபின் உத்தப்பா சென்னை அணியும் ஜெசன் ராய் குஜராத் அணியும் ஏலம் எடுத்ததமை குறிப்பிடத்தக்கது.