பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதி போட்டி லாஹுரில் நேற்று (27) முல்தான் சுல்தான் மற்றும் லாஹுர் காலாண்டர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.இப் போட்டியில் லாஹுர் அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய லாஹுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.அதிகபட்சமாக முகம்மத் ஹபீஸ் 69(46) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
181 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சுல்தான் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.அணியின் தலைவர் முகம்மத் ரிஸ்வான் 14 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஷஹீன் அப்ரிடி தலைமையிலான லாஹுர் காலாண்டர்ஸ் அணி முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.அணியின் தலைவர் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.