SL Vs India T20 Updates: இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்தது இந்தியா அணி!

Date:

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இலங்கை அணிசார்பில் அதிகபடியாக தசுன் சானக்க 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணியின் அவேஷ் கான் 23 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணிசார்பில் அதிகபடியாக ஸ்ரேயாஷ் ஐயர் 73 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.பந்துவீச்சில் இலங்கை அணியின் லஹிரு குமார 39 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இதற்கமைய, இந்திய அணி 3-0 என்ற அடிப்படையில் இருபதுக்கு20 தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...