அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகள் 2022 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி தங்கள் கூட்டு தேசியக் கொள்கையை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஜனநாயக சுதந்திர முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, தேசிய காங்கிரஸ், பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, விஜய தரனை தேசிய சபை, மற்றும் எக்சத் மகாஜன கட்சி ஆகியன அங்கம் வகிக்கின்றன.
மார்ச் 2 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் மண்டபத்தில் தேசியக் கொள்கை வெளியிடப்படும்.
இதன்போது, இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை கொண்டதாக தேசிய கொள்கை உள்ளதாக கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் முன்மொழிவுகளையும் இந்த தேசியக்கொள்கை விடயத்தில் உள்ளடக்கியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.