இஸ்ரேலை ஒரு இனவாத நாடாக முத்திரை குத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை!

Date:

-லத்தீப் பாரூக்

லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை 2022 பெப்ரவரி முதலாம் திகதி வெளியிட்டுள்ள 211 பக்கங்களைக் கொண்டுள்ள அறிக்கையில் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் என்ற நாடு ஒரு இனவாத நிறவெறி கொண்ட நாடு என தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை அங்கு நிலை நிறுத்துவதற்காக மிகக்கொடூரமான வழிமுறைகளை அங்கு பிரயோகித்து வருகின்றது.

மனித குலத்துக்கு எதிரான பல குற்றங்களையும் அது அங்கே புரிந்து வருகின்றது என்று அந்த அறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதஉரிமை அமைப்பொன்று மிக அண்மைக்காலத்தில் மீண்டும் இஸ்ரேலை இனவாத பாகுபாடு கொண்ட ஒருஅரசாக முத்திரை குத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாக இது அமைந்துள்ளது.

1948ல்இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டதுமுதல் யூத குடிப் பரம்பல் மேலாதிக்கப் போக்கை முன்னெடுத்துச் செல்லும் வகையிலான ஒரு கொள்கையையே அந்த நாடு அமுல் செய்து வருகின்றது என்று 1977ல் சமாதானத்துக்கான நோபள்பரிசைவென்ற அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய யூதர்களுக்குகாணிகள் மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகளை அதிகரிக்கும் வகையிலான தனது கட்டுப்பாடுகளை அது மேலோங்கச் செய்து வருகின்றது. பலஸ்தீனர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைக் குறைப்பதன் மூலம்இதைச்செய்கின்றது.

இதற்காக பலஸ்தீன மக்களின் உரிமைகள்மீதுகட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இவற்றை எதிர்த்து சவால் விடுக்கக் கூடிய பலஸ்தீன மக்களின் ஆற்றல்களுக்கும் இங்கே தடைகள் போடப்படுகின்றன என்று அந்த அறிக்கை தொடருகின்றது.

இஸ்ரேலை ஒரு இனவாத நிறவெறி கொண்ட அரசாக வகைப்படுத்தும் மன்னிப்புச்சபை இதற்கு முன்னர் பல்வேறு அறிக்கைகளில் இஸ்ரேல் சாடப்பட்டதிலும் பார்க்க கடுமையாக அதன் கடைசி அறிக்கையில் சாடி உள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு நாடு இனவாத பிரிவினைவாதத்தை பலஸ்தீன மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு ஒழுங்கு முறையாகப் பின்பற்றுகின்றது. ஆனால் தனது மக்கள் வாழும் பகுதிகளில் இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தனது வகைப்படுத் தலை மேலும் விரிவுபடுத்தி உள்ள மன்னிப்புச் சபை இஸ்ரேல் தனது நிறவெறி நடை முறையை சர்வதேச அரங்கிலும் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பெரும்பாலும் அதன் எல்லா சிவில் நிர்வாகமும்  இராணுவ அதிகார சபைகளும்  இஸ்ரேல் முழுவதும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான நிறவெறி இனவாத போக்கினை பிரயோகிப்பதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளிலும் பலஸ்தீன அகதி மக்கள் வாழும் தனது ஆள்புத்துக்கு அப்பாற்பட்ட பகுதிகளிலும் இஸ்ரேல் இந்த முறையைப் பின்பற்றுகின்றது.

தனது அறிக்கையை வெளியிடுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெரூஸலத்தில் ஊடக மாநாடு ஒன்றை நடத்திய சர்வதேச மன்னிப்புச் சபை செயலாளர் நாயகம் ஆக்னஸ் கெலமார்ட் பலஸ்தீன மக்கள் தமது பூர்வீக இடங்களில் இருந்து தற்போது வெளிறேறப்பட்டு வருகின்றமையைக் கோடிட்டுக் காட்டிப் பேசினார்.

நேகவ் பிரதேசத்தில் மூன்று சதவீதத்தக்கும் குறைவான தோர் பரப்பில் தான் பலஸ்தீனமக்கள் தற்போது வாழுகின்றனர். அது கூட அதிகமானதா? அதிகமானது என்றால் யாருக்கு அல்லது எதற்கு? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ்கெலமார்ட் ஜெரூஸலத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் உரையாற்றுகின்றார்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க ஆய்வாளரும் பிரசாரப் பணிப்பாளருமான பிலிப்லூத்தர் மற்றும் செயற்பாட்டாளர் ஓர்லி நொயே ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.

குடியிருப்புக்களும் புறக்காவல் நிலையங்களும் நாளுக்கு நாள் பன்மடங்காகப் பெருக்கெடுத்த வண்ணமே இருக்கின்றன. இவை எல்லாமே அதிகார பூர்வமான அமைப்புக்களின் ஆதரவுடன்தான் இடம்பெறுகின்றன.

இவை எல்லாமே ஒரு ஒழுங்கு முறையின் கீழ் இன வெறி குற்றப் பின்னணியைக் கொண்டுள்ளன என்று அவர் மேலும் விளக்கினார். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 60 லட்சம் பலஸ்தீன அகதிகள் உள்ளனர்.

இவர்கள் எல்லோருமே பலஸ்தீனத்தில் இருந்துஅன்று பல வந்தமாக தமது தாயக பூமியில் இருந்து வெளியேற்றப்பட்ட 750,000 முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பலஸ்தீனமக்களின் வாரிசுகள்.

இந்த வெளியேற்றம் தான் மனித வரலாற்றின் மிகமோசமான இனச் சுத்திகரிப்பு என வரலாற்றியலாளர்களால் வர்ணிக்கப்படுகின்றது.

அவர்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பி வருவதை இஸ்ரேல் எல்லா சந்தர்ப்பங்களிலும் தடுத்து வந்துள்ளது.

இந்த மக்கள் தமது தாயகத்துக்கு திரும்பி வர அனுமதிக்கப்பட வேண்டும் என ஐக்கியநாடுகள் சபையில் பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

இஸ்ரேலிடம் தீர்மானங்கள் மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கைகள் பலவிடுக்கப்பட்ட போதிலும் அதைப் பொருட்படுத்தாது இந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வர இஸ்ரேல் தடை விதித்து வருகின்றது.

பலஸ்தீன மக்கள் திரும்பி வருவதைத் தடுக்கும் வகையில் 1950ல் இஸ்ரேல்ஒரு இனவாத சட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டது.

இந்த சட்டத்தின் பிரகாரம் வெளியேற்றப்பட்டபலஸ்தீன மக்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் காணிகள் என்பனவற்றைகைப் பற்றிஅதை தமதாக்கிக்கொள்ளும் உரிமை இஸ்ரேலிய யூதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பாரம்பரியமாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சுதேச இனத்தவர்களான யூதர்கள் அல்லாத பலஸ்தீன மக்கள் உலகம் முழுவதும் அகதிகளாக வாழுகின்றனர்.

இஸ்ரேல் அரசு மேற்குலகில் உள்ள அதன்பிரசார குழுக்களோடு சேர்ந்து தன்னை ஒரு ஜனநாயகக் கொள்கை கொண்ட நாடாகக் காட்ட முனைந்து வருகின்றது.

இந்தப்பிரசார குழுக்கள் தான் அன்று முதல் இன்று வரை இஸ்ரேலின் அராஜகங்களுக்கு கைகொடுத்து வரும் குழுக்கள் ஆகும்.

அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள இஸ்ரேல் இந்த முயற்சியைத் தொடர்ந்து செய்து வருகின்றது.

இந்தக் குழுக்கள் தான் இன்று சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கை யூத எதிர்ப்பு அறிக்கை என அவைவர்ணித்துள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரிட்டிஷ் பேச்சாளர் ‘தொடர்ந்து மீறப்பட்டுவரும் மனித உரிமைகளைக் கோடிட்டுக் காட்டும் எமது தொடர் முயற்சியின் ஒருகட்டமே இந்த அறிக்கையாகும். அவை எங்கு நடந்தாலும் சரி. எந்தவொருஅரசும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தல்ல.

இஸ்ரேல் அரசும் அவ்வாறுதான் என்றுகூறினார்.இஸ்ரேலில் வாழும் பலஸ்தீன மக்களுக்கு எதிராகவும்  ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனபகுதிகளில் வாழும் பலஸ்தீனர்களுக்கு எதிராகவும்  அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளபலஸ்தீன மக்களுக்குஎதிராகவும் இஸ்ரேல் அதிகார பீடம் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இனவாத போக்கைபின்பற்றி வருவதுஇதுவரைபலஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இப்போது வெளியாகி உள்ள இந்த அறிக்கையும் பலஸ்தீன மக்கள் எவ்வாறு தாழ்த்தப்பட்ட ஒரு பிரிவுமக்களாக நிறவாதத்துக்கும்  இனவாதத்துக்கும்  அடக்குமுறைக்கும் உற்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதையும் அவர்களது உரிமைகள்மீதுஇஸ்ரேல் எவ்வாறு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதையும்மேலும் தெளிவுபடுத்தி உள்ளது.

கடந்தாண்டு முக்கியமான மனித உரிமை அமைப்பு, மனிதஉரிமைக் கண்கானிப்பகம் மற்றும் இஸ்ரேலிய அமைப்பான என்பன இணைந்து முக்கியமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தன.

அதிலும் இஸ்ரேல் ஒரு இனவாதஅரசு என்றுமுத்திரை குத்தப்பட்டிருந்தது. மற்றொரு இஸ்ரேலிய அமைப்பான யேஷ்தின் என்ற அமைப்பும் 2020ம் ஆண்டிலிருந்து இதே பதத்தை இஸ்ரேலுக்கு எதிராகப் பிரயோகித்து வருகின்றது.

இதே கருத்தைதான் பல தசாப்தங்களாக பலஸ்தீன மக்களும் அவர்களுக்குஆதரவான குழுக்களும் தெரிவித்து வருகின்றன.

தென் ஆபிரிக்காவில் இனவாதத்துக்கு எதிராகப் போராடிய அமைப்புக்கள் மற்றும் பேராயர் டெஸ்மன்டுடு போன்ற அவர்களின் தலைவர்களும் இஸ்ரேல் ஒரு இனவாதநாடு என்பதை பல தடவைகள் உரத்த குரலில் தெரிவித்துள்ளனர்.

மிட்ல் ஈஸ்ட் மொனிடர் என்ற ஒரு மத்திய கிழக்குபதிப்பில் 2011 பெப்ரவரி 1ல் வெளியாகி உள்ள ஒரு ஆக்கத்தில் நாசிம் அஹமட் என்ற பத்தி எழுத்தாளர் இஸ்ரேலை ஒரு இனவாத நாடு என்று வர்ணித்த கடைசி அமைப்பாக சர்வதேச மன்னிப்புச் சபை அமையப் போவதில்லை.

இஸ்ரேலுக்கு இந்த அந்தஸ்த்தை வழங்க இன்னும் பெருமளவான அமைப்புக்கள் வரிசையில் காத்திருக்கின்றன என்பதை இப்போதைக்கு உணர முடிகின்றது.

மனித உரிமை கண்கானிப்பகம், யேஷ்தின் போன்ற அமைப்புக்கள் இப்போதைக்கு இந்த வரிசையில் இணைந்துள்ளன.

இவைதங்களால் முடிந்தளவுக்கு இஸ்ரேலின்இனவாத போக்கை வெளிச்சமிட்டுக்காட்டி உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மனித உரிமைக் காவலர்களாக தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும்அமெரிக்கா  பிரிட்டன் ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஏன் அவுஸ்திரேலியா கூட மன்னிப்புச் சபையின் அறிக்கையை ஏற்க மறுத்துவருகின்றன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...