ரஷ்யா – உக்ரைனில் இடம்பெற்று வரும் போர் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு நிலவும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உக்ரைனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கம் +90 534 456 94 98, +90 312 427 10 32/ மின்னஞ்சல்: slemb.ankara@mfa.gov.lk.
உக்ரைன் தலைநகர் கீவ் அல்லது அதைச் சுற்றிலும் பல குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகரில் குறைந்தது ஒரு அடுக்குமாடி கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.