‘நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம். எங்கள் இராணுவம் இங்கே உள்ளது. நாங்கள் அனைவரும் இங்கு எங்கள் சுதந்திரத்தையும், நாட்டையும் பாதுகாக்கிறோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தலைநகரில் தலைமைத் தங்கி பாதுகாப்பதாக முக்கிய உதவியாளர்களுடன் சபதம் செய்து வெள்ளிக்கிழமை மத்திய கீவ் நகரில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இதன்போது, ‘நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம். எங்கள் இராணுவம் இங்கே உள்ளது. சமுதாயத்தில் குடிமக்கள் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் இங்கு எங்கள் சுதந்திரத்தையும், நாட்டையும் பாதுகாக்கிறோம், அது அப்படியே இருக்கும், ‘என்று ஜெலென்ஸ்கி ஜனாதிபதி கட்டிடத்திற்கு வெளியே நின்று கூறினார்.
உக்ரைன் மீது கடந்த 24 ஆம் திகதி ரஷ்யா இராணுவப் போர் நடவடிக்கையை தொடங்கியது. முதல் நாளிலேயே வான்வழிக் கட்டமைப்பை கையகப்படுத்தியது.
இரண்டாவது நாளான நேற்று உக்ரைனுக்குள் தரை வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. செர்னோபில் அணு உலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.
துறைமுக நகரங்களை சுற்றிவளைத்து உக்ரைனுக்கு கடல்வழியாக உதவிகள் கிடைக்காமல் முடக்கியது.
நேற்று மாலை கீவ் நகரிலிருந்து மூன்று மைல் தொலைவில் முகாமிட்ட ரஷ்யப் படைகள் அரசுப் பணியாளர்கள் குடியிருப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு இசைவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.