இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் டெல்லி மீரட் அதிவிரைவு சாலையில் தனியார் நிறுவனமொன்று ஏர் இந்தியா விமானத்தை 100 இருக்கைகள் கொண்ட உணவகமாக மாற்ற உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து விமான நிலைய ஆணையத்திடமிருந்து ஏலத்தில் எடுத்த ஏர் பஸ் ஏ-320 ரக விமானத்தை உணவகமாக மாற்ற திட்டமிட்டுள்ளன.
இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனத்துக்கு டெல்லி – மீரட் அதிவிரைவு சாலையில் 5 ஹெக்டேர் நிலத்தை 15 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ஏரோ பிளேன் உணவகம் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த விமானம் அந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அதன் உள்ளே உணவகம் போல மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.