நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு அவசர நடவடிக்கை தேவை: எதிர்க்கட்சிகள் அறிக்கை

Date:

நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசர ஆக்கபூர்வமான தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அதற்கமைய இந்த விடயம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன உட்பட பலர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில், அரசாங்கம் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தற்போதைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு கூட்டு திட்டமொன்றிற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தேசிய பொருளாதார கொள்கைக்கு மிகவும் சிறந்த பொருளாதார கொள்கை அவசியம் என்றும் இது தற்போதைய நிலைமைக்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வை காண உதவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் இறையாண்மை கடனை செலுத்துவதை ஒத்திவைப்பதற்கும் கடனை செலுத்துவது குறித்த மீள் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பலபடிமுறையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்ற யோசனையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், திஸ்ஸ விதாரண, எம்.ஏ. சுமந்திரன், ஆர் சம்பந்தன், மனோகணேசன், ஹர்ஸ த சில்வா,ரிஷாத் பதியூதீன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...