நாட்டில் இன்று (01) மாலை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக மின் தேவை காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று மாலை 6.30 முதல் 8.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.