ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே இன்று(18) காலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 3.8 ரிக்டராக பதிவாகியதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூருக்கு வடமேற்கே 92 கிலோ மீட்டர் தொலைவில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகிய இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.