இந்திய கடற்பரப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

Date:

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி ஐந்து இலங்கை மீனவர்ளையும் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படையினர் தடுத்து வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்ற ரோந்து கப்பல் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.

இதன்போது, கன்னியாகுமரியில் இருந்து வடக்கு பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் சந்தேகமான வகையில் ஒரு மீன்பிடி படகு மீன் பிடித்துக் கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை பிடித்ததுடன் அந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பதும், அதில் இலங்கை புத்தளம் மாவட்டம் சில்லா மற்றும் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் இருந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையை சேர்ந்த 5 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த படகுடன் 5 பேரையும் கடலோர காவல் படையினர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

குறித்த நபர்களான ஜே.பி.எஸ். பிகரு மற்றும் டி.ஜி.எஸ். பெர்னாண்டோ, நீர்கொழும்பைச் சேர்ந்த இருவரும், டபிள்யூ.என்.கே. பெர்னாண்டோ, டபிள்யூ.எம்.ஏ.ஏ. பெர்னாண்டோ மற்றும் வி.எம்.ஆர்.ஐ. அந்தாதி, அனைவரும் சிலாபத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...