இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய வங்கி ஆளுநருடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடல்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் அடங்கிய குழு இன்றைய தினம் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை சந்தித்துள்ளது.

அதற்கமைய அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 8 முக்கிய விடயங்களை முன்மொழிந்ததாகவும், அதற்கு இன்றுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொருளாதார சுமையை குறைக்க பொருளாதார குழு பல திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும், அதில் ஒன்று சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது என்றும் ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

‘அவசர கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை நாங்கள் முன்மொழிந்தோம் மற்றும் இலங்கை கடனை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தை ஈடுபடுத்த நாங்கள் முன்மொழிந்தோம். தொற்றுநோய்-தடுப்புக்காலத்தை தீவிரமாக பரிசீலிக்குமாறு அவர்களிடம் கூறினோம், வங்கிகளும் வணிகங்களும் அதை எப்படி சமாளிக்கும். சில உதவிகளை பரிசீலிக்க வேண்டும்,’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...