உக்ரைனில் உள்ள அரசு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியதுள்ளது.
உக்ரைனில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளர், கிறிஸ்டோபர் மில்லர், ‘சுதந்திர சதுக்கத்தின் விளிம்பில் அமர்ந்திருக்கும் நகரின் மையத்தில் உள்ள கார்கிவின் வரலாற்று அரசாங்க தலைமையகம்’ என்று கட்டிடத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
கார்கிவ் நகரில் ரஷ்ய வான்வழித் தக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதுடன் பல படுகாயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் அரசு கட்டடம் ஒன்றில் ரஷ்யா வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 6ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷ்யா பின்வாங்க தயாராக இல்லை.
உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷ்யா இறங்கி உள்ளது.
தொடர்ந்து உக்ரைனின் இராணுவ தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதலை தொடுத்து வருகிறது.
இதேவேளை குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.