எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே ரயில்களை இயக்க முடியும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.
கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலையிலிருந்து அனைத்து ரயில்களுக்கும் போதிய எரிபொருள் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை எண்ணெய் களஞ்சியத்திலிருந்து ரயில்களுக்கான தேவையான எண்ணெய் உள்ளதாகவும் இனிவரும் நாட்களில் ரயில் தடையின் இயங்கும் என இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது.