காலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

Date:

காலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலத்தை நீடிக்க தீர்மானித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், ஓராண்டுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கவும் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் 1, முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன சாரதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த கால நீடிப்பினால் வழங்கப்பட்ட சலுகைக் காலத்தின் பிரகாரம் மேற்படி நாட்களில் இரத்துச் செய்யப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்களும் இதில் உள்ளடங்குவதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கணினி செயலியை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிமுகப்படுத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள தற்காலிக ஓட்டுநர் உரிமத்திற்கு ஓராண்டு செல்லுபடியாகும் புதிய தற்காலிக ஓட்டுநர் உரிமத்தை உரிமதாரருக்கு தபால் மூலம் வழங்குதல்.

அதேநேரம், மீட்புக்குப் பிறகு சம்பந்தப்பட்ட கார்டுகளை அச்சிட்டு விண்ணப்பதாரரின் வீட்டிலேயே ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் எனறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...