திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

Date:

இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை,வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதுடன், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தில் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் உள்வாங்கப்பட வேண்டியது அவசியம்.

வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலுக்கான ஏற்பாடுகள் குறித்த கட்டளைச் சட்டத்தில் உள்வாங்கப்படாமையால், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

இன–மத எல்லைகளை தாண்டிய தன்னார்வ சேவை:சிவில் சமூக அமைப்புகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் சந்திப்பு!

கொழும்பு – இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களின் பின்னணியில்,...

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நீர்த்தடை

அம்பத்தலேயிலிருந்து தெஹிவளை வரை செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட...

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...