நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி: நாளை ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம்!

Date:

(File Photo)
ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (22) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு நாளை மாலை 6.00 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாளை மாலையில் நடைபெறவுள்ள விசேட கூட்டத்திற்கு முன்னதாக, ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு நாளை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...