பிரியந்த குமார கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 89 பேர் மீது பாகிஸ்தான் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Date:

கடந்த ஆண்டு பாகிஸ்தான் சியால்கோட் நகரில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளரான பிரியந்த குமார தியவதனகேவை தீ வைத்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 89 நபர்கள் மீது பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 3 அன்று, பிரியந்த குமார, நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கொண்ட ஒரு கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட்டார்.

இதனையடுத்து பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 302, 297, 201, 427, 431, 157, 149 மற்றும் எதிர்ப்புத் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 11WW பிரிவுகள் 302, 297, 201, 427, 297, 201, 157, 149 ஆகியவற்றின் கீழ் உகோகி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அர்மகன் மக்ட்டின் மனுவின் பேரில் ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸின் 900 தொழிலாளர்கள் மீது அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பயங்கரவாத சட்டத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த நாட்களில் ஏராளமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் பரவலான சீற்றத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கப்பட்டதுடன் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரினர்.

அதற்கமைய நீதிபதி நடாஷா நசீம் லாகூர் கோட் லக்பத் சிறையில் இன்று வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கினார்.

மூத்த சிறப்பு வழக்கறிஞர் அப்துல் ரவூப் வத்தூ உட்பட ஐந்து வழக்கறிஞர்கள் இன்று சிறையில் ஆஜராகினர்.

தொழிற்சாலையில் உள்ள 10 டிஜிட்டல் சீசிடிவி காட்சிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் 56 குற்றவாளிகளின் மொபைல் போன்களில் இருந்து மீட்கப்பட்ட காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சந்தேகநபர்களின் குற்றம் மன்னிக்க முடியாதது என்றும், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...