போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கிம்புலா’ எலே குணாவின் பிரதான உதவியாளர் கைது!

Date:

பல  குற்றங்கள் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எலே குணாவின் பிரதான உதவியாளர் மற்றும் தோழருமான ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (28) பிற்பகல் புளூமெண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெடிபானா எல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்தேகநபரிடம் 13 கிராம் ஹெரோயின், 01 கிராம் ஐஸ், 22 கிராம் கேரள கஞ்சா மற்றும் 160 “PREGA TABLETS” எனும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 150,200 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொழும்பு 15, அளுத் மாவத்தையில் வசிக்கும் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல்...

நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவு மழைக்கான சாத்தியம்!

நாட்டில் இன்று (11) மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா,...

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...