மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு, உலக வங்கி உதவி!

Date:

இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்து ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய மனித அபிவிருத்திக்கான பிராந்திய பணிப்பாளர் லின் டி. ஷெர்பர்ன்-பென்ஸ்,(Lynne D. Sherburne-Benz) உடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இலங்கையில் தொடர்ச்சியான மருத்துவ மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்த உலக வங்கியின் உதவியை இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார்.

இதனை கருத்திற்கொண்ட உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் இராஜாங்க அமைச்சருக்கு உலக வங்கி அதிக முன்னுரிமை அளித்து உடனடியாக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமென அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த Pகணைநச தடுப்பூசிகளைப் பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட நிதி உதவிக்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜெயசுமண உலக வங்கிக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் அமெரிக்க-இஸ்ரேலிய இந்திய தரப்பின் இருப்புக்கள், முஸ்லிம்கள் தொடர்பான NPP அரசின் கொள்கையில் செல்வாக்கு செலுத்துகின்றதா??

-லத்தீப் பாரூக் இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி காலஞ்சென்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா...

பாடசாலையில் 2 மாணவர்களைச் சேர்க்க ரூ. 2.5 லட்சம் இலஞ்சம்: உனவட்டுன பாடசாலை அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

காலி - உனவட்டுன, ருமஸ்ஸல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின்...

உலக எழுத்தறிவு தினம் இன்று: உலகளவில் எழுத்தறிவு 88%ஐ எட்டியது; இன்னும் படிப்பறிவு இல்லாத 739 மில்லியன் மக்கள்.

சர்வதேச எழுத்தறிவு தினம் அறிவிக்கப்பட்டு ஆறு தசாப்தங்கள் (60 ஆண்டுகள்) நிறைவடைந்துள்ள...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகப்பூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று...